நள்ளிரவில் இப்படியா..?

   நள்ளிரவில்... 
+++++++++++++

பேய்க் கூட்டம் பிணக்காட்டில் நீராடும்
பேஷ்புக்கில் 'புரட்சிகள்' போராடும்
ஹாய் சொல்லி பேக் ஐடி கதை தொடங்கும்
ஹாஜியார் கனவினிலே செக் கொடுப்பார்.

கடற்கரையில் ஒரு கூட்டம்
காட்ஸ் அடிக்கும்
களவாணிக் கூட்டங்கள் உளவு பார்க்கும்
படக்கட்டம் கிளைமார்க்ஸில் பைட் பண்ணும்
பால் கேட்டு சிறு பிள்ளை வீல் வைக்கும்.

நுளம்பு படையோடு கிளம்பிவரும்
கொழும்பிலிருந்து on the way கோல் வரும்
குழம்பும் சிலர் தூக்கம் குரை நாயால்
எழும்பும் குறட்டைகள் எஞ்சின் சவுண்டில்.

வீடியோ சத்தம் இன்றி வெறிக்கப்படும்
கூடி சிலர் கஞ்சாவில் பஞ்சராவார்.
நாடு விட்டு நாடு சென்றோர் நினைவு வாட்ட
நாடுவார் குடும்பத்தை ஸ்மார்ட் போணில்.

ஆணின்றி இருக்கின்ற பெண்கள் வீட்டில்
போன வாரம் பூட்டுடைத்த திருட்டை எண்ணி
வீணாகப் பயப்படுவார் வெடவெடப்பார்
விடிய விடிய ஓதி ஓதி முடியும் இரவு.

நல்லவர்கள் அதிகாலை எழும்பும் நோக்கில்
அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு அமைதியாக
உள்ளமும் உடலும் ஓய்வெடுக்க
உறங்குவார் எழும்புவார்
உரிய நேரம்.

...முஹம்மட் நிசோஸ்..

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -