கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அமைச்சுக் காரியாலயத்தில் இன்று (20) சற்று முன் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த திருகோணமலை சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் உத்தியோகபூர்வ அலுவலக குளிரூட்டியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்துச் சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் பாரியளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முகம்மட் நஸீர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இச்சம்பவம் இடம்பெற்றபோது தான் அமைச்சின் காரியாலத்தில் இருக்கவில்லை எனவும் தனது அமைச்சின் கீழுள்ள சமூக சேவை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதியோர்கள் தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த வேலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற நான் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சுகாதார அமைச்சரின் பிரத்தியோக உத்தியோகத்தார்களாலும், அமைச்சு உத்தியோகத்தார்களாலும் தீயை ஓரளவு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தோம். அத்துடன் தீயணைப்பு படை வீரர்களால் முழுமையாக தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் தற்போது கிழக்கு மாகாண சபை அமைந்துள்ள கட்டிடங்கள் அனைத்தும் தீயணைப்பு பரிசோதர்களால் பரிசோதனை செய்யப்படு வருகின்றதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.