இறக்காமம் பிரதேச இளைஞர்களின் அரச தொழிற்பயிற்சி நிலைய கனவானது வெகு விரைவில் கைகூடவுள்ளது. இறக்கமப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் தங்களுடைய தொழில்சார் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அக்கரைப்பற்று , சம்மாந்துறை போன்ற பிரதேசங்களுக்கு சுமார் 18 – 20 Km வரை பயணம் செய்து ஊர் திரும்ப வேண்டிய நிலை காணப்பட்டது.
இந்நிலையில் இளைஞர்களின் குடும்ப வறுமை போன்ற காரணங்களினால் வெளியூர்களுக்கு தொடர்ந்து சென்று கல்வி கற்பதில் பாரிய அசௌகரியங்களை இளைஞர்கள் எதிர்நோக்கியதோடு இடைநடுவில் தொழில்சார் கல்வி நடவடிக்கைகளை கைவிடவேண்டிய நிலையும் காணப்பட்டது.
இது தொடர்பாக அவதானம் செலுத்திய இறக்கமப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் பொறியியலாளருமான எஸ்.ஐ. மன்சூர் அவர்கள் 01.09.2016 அன்று திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களுக்கு அனுப்பிய கடிதத்துக்கு அமைவாக இன்று அம்பாறை மாவட்ட தொழில்பயிற்சி நிலைய பணிப்பாளர் பொறியியலாளர் T.வினோதராஜா உள்ளிட்ட குழுவினர் இறக்காமம் மெளலான நிலையத்திற்கு வருகை தந்து பொறியியலாளர் மன்சூர் அவர்களை சந்தித்து உரையாடியதுடன் மௌலான நிலையத்தினையும் பார்வையிட்டனர்.
மேலும் எதிர்வரும் கல்வியாண்டில்
1. Industrial Electrical
2. Auto Mobile
3. English
4. Information Technology
5. Electrical Motor Winder போன்ற கற்கை நெறிகளினை ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தொழில் பயிற்ச்சி நிலைய பணிப்பாளர் தெரிவித்தார்.
இவ்வாறான அரச தொழிற்பயிற்சி நிலையம் எமது பிரதேசத்தில் அமைக்கப்படும்போது எமது இளைஞர்கள் அரச மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவினால் வழங்கப்படும் (NVQ) சான்றிதழ்களினைப் பெற்று எதிர்காலத்தில் தங்கள் தொழில் ரீதியான முழு வெற்றியை பெற முடியும்.