வைத்தியசாலைகளுக்கு கண்காணிப்புக் கமறா : முதலமைச்சர் நஸீர் 5.22மில்லியன் ஒதுக்கீடு

வைத்தியசாலைகளுக்கு கண்காணிப்புக் கமறா பொருத்துவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் பணிப்பில் 5.22 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் நடைபெறும் குற்றச்செயல்கள் மற்றும் அங்கிருந்து வரும் முறைப்பாடுகளுடன் கூடிய பல பிரச்சனைகளை சிசிரிவி கமறா மூலம் கண்காணித்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் இதற்கு முதல் இடம்பெற்ற பல சம்பவங்களின்போது எழுந்த பிரச்சனைகளினால் மக்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முதலமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் செங்கலடி வைத்தியசாலைக்கு ரூபாய் 1,551,350. வாழைச்சேனை வைத்தியசாலைக்கு ரூபாய் 1,994,950. மீராவோடை வைத்தியசாலைக்கு ரூபாய் 1,054,000. ஏறாவூர் வைத்தியசாலைக்கு ரூபாய் 1,571,100 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள், நோயாளிகள், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டே இந்த நடவடியினை முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -