இக்பால் அலி-
மனிதன் என்ற வகையில் கண்கள் என்பது மிகவும் முக்கியத்துபம் வாய்ந்த ஒன்று. ஒவ்வொரு மனிதனுக்கும் காலப்போக்கில் வயதிற்கு ஏற்ப வெள்ளை படர்தல் நோய் ஏற்படுவது வழக்கமானவை. இதனால் பார்வை குன்றிய ஏழை மக்கள் அதனை சத்திர சிகிச்சை செய்து கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். சத்திர சிகிச்சைய அரச வைத்தியசாலையில் செய்து கொள்வதாயின் மாதக் கணக்கில் அல்லது வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டி வரும். அல்லது தனியார் வைத்தியசாலையில் செய்வதாயின் 50000 ரூபாவுக்கு மேல் செலவு செய்ய வேண்டி வரும். எனவே நாங்கள் இந்த மக்களின் பிரச்சினையைக் கவனத்திற் கொண்டு நாடாளாவிய ரீதியில் இன மத வேறுபாடின்றி இலவசமாக இந்த கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டு கண்களுக்கு ஒளிவூட்டி வருகின்றோம் என்று சவூதி அரேபியா சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மௌலவி ஜே. எம் இம்ரான் தெரிவித்தார்.
சவூதி அரேபியா சர்வதேச இஸ்லாமிய நிவாரண அனுசரணையுடன் சபாப் நிறு வனத்தின் ஏற்பாட்டில் 20 வது தடவையாக நடத்தப்படும் இலவச வெள்ளை படர்தல் கண் சத்திர சிகிச்சை முகாம் புத்தளத்திலுள்ள குவைட் தனியார் வைத்தியசாலையில் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் இம்மாதம் 4 ஆம் திகதி வரை இடம்பெற்றது. பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கண் வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டு இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டார்கள். இறுதி நாளன்று இடம்பெற்ற விசேட நன்றி கூறும் நிகழ்வில் கலந்து கொண்ட சவூதி அரேபியா சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மௌலவி ஜே. எம் இம்ரான் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
முதிய பருவத்தில் முதியோரை மதித்தல் வேண்டும். அதேவேளை அவர்கள் மேலும் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்வதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுத்தல் வேண்டும். அரசாங்கத்தால் அவர்களுடை சகல தேவைகளையும் செய்து முடித்து விட முடியாது. முதிய வயதை அடையும் போது கண்ணில் வெள்ளை படர்தல் நோய் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத நிலையாகும். அந்த வகையில் முஸ்லிம் சமூக அமைப்புக்கள் சேர்ந்து இலங்கையின் நல்லிணக்கத்தையும் கருத்திற் கொண்டு கண்ணில் வெள்ளை படர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இலவசமாக சத்திர சிகிச்சை செய்து முதியவர்களின் சேமநலத்தில் பாரிய பங்களிப்பினை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். இதற்காக யார் யாரெல்லாம் பங்களிப்புக்களை செய்தார்களோ அவர்களுக்கு நன்றியுடைவாகளாகவும் அவர்களுக்கு நாங்கள் பிரார்த்தனை புரியபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
இந்த குறித்த நாட்களில் 1200 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இது வரை மொத்தமாக இந்த நாட்டில் சுமார் 25000 கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் நாலா திக்குகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம். கிறிஸ்தவ அனைத்து மக்களும் கலந்து கொண்டு இந்த இலவசமாக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சவூதி அரேபியா சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி முஹமட் பா ஜுனைட் சவூதி ஆரேபியா சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் தலைமையகத்திலிருந்து வருகை தந்த அதிகாரி முஹம்மட் அல் அமூதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.