உரி இராணுவ முகாம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்த நிலையில், “போர் எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது,” என்று அந்நாட்டு தூதர் அப்துல் பாசித் கூறிஉள்ளார்.
கடந்த 18–ந் தேதி காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து கொடூர தாக்குதல்கள் நடத்தி, 18 வீரர்களை கொன்று குவித்தனர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவித்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலிக்க செய்திருக்கிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று முப்படை தளபதிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
மாலையில் கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், பாகிஸ்தான் மக்களுக்கு நான் இங்கிருந்து கூற விரும்புகிறேன். காஷ்மீரைப் பற்றி பேசி உங்கள் தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள். இந்தியா கம்ப்யூட்டர் மென்பொருளை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் பயங்கரவாதத்தை உலகமெங்கும் ஏற்றுமதி செய்துவருகிறீர்களே என நீங்கள், உங்கள் நாட்டு தலைவர்களை கேட்க வேண்டும்.
உங்கள் நாடு பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்ததின் விளைவாக எங்கள் வீரர்கள் 18 பேர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அதை இந்தியா ஒரு போதும் மறக்காது. அவர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்பதை நான் பாகிஸ்தான் தலைமைக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உரி ராணுவ முகாம் தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கோபம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு அடிபணிந்து விடாது. அதை தோற்கடிப்பதற்காக கடுமையாக முயற்சிக்கும். ஆசியாவில்
இந்த ஒரு நாடுதான் பிற நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது.
பாகிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள தலைவர்கள் பயங்கரவாதிகள் எழுதித் தருவதை வாசிக்கிறார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து, அப்பாவி மக்களை கொன்று குவித்து, ரத்தம் சிந்த வைப்பதை இந்தியா அம்பலப்படுத்தும் என்றார்.
பிரதமர் மோடியின் எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தான் நாட்டின் இந்தியாவுக்கான தூதர் பேசுகையில், “ போர் எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. போர் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். போர் வெறி எங்களின் பேச்சுவார்த்தையை கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டோம். அமைதியான முறையில் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன். இந்தியாவுடன் நட்பு பாராட்டவே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியாவுடன் பிரச்சனை உள்ளது, அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. என்றார். உரி பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திஉள்ளனர். இதுதொடர்பாக பாசித் பேசுகையில், தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வரும் நிலையில் முன் கூட்டியே நாம் எதுவும் கூற முடியாது. காஷ்மீர் பதற்றத்தை இந்தியாவால் மூடி மறைக்க முடியாது. யூரி தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எந்த பங்கும் கிடையாது.
மற்ற பாகிஸ்தானியர்களை விட பலுசிஸ்தான் மக்கள் தங்களை பாகிஸ்தானுக்காக அர்ப்பணித்துள்ளனர் என்று பேசிஉள்ளார்.தித