ஷிரந்தி மற்றும் யோஷிதவுக்கு எதிராக விசாரனை..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ மற்றும் அவரதும் புதல்வர் யோஷித உள்ளிட்ட ஐவருக்கு எதிராக விசாரனை மேற்கொண்டு வருவதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு ரகசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் ” சிரிலிய சவிய ” அமைப்பிற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட டிபண்டர் வாகனம் இலங்கை மோட்டார் போக்குவருத்து திணைக்களத்தின் எதுவித அனுமதியும் இன்றி இரு தடவைகள நிறத்தை மாற்றியமை தொடர்பிலும் அந்த டிபண்டர் வாகனம் யோசிதவினால பாவனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரு தடவைகள் நிறம்மாற்றப்பட்டுள்ள குறித்த டிபண்டர் வாகனம் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் இந்த விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே சிரிலிய சவியவுக்கு போலி அடையாள அட்டையில் வங்கி கணக்கு துவங்கியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட இருந்ததாகவும் ஜனாதிபதி மைத்ரி தலையிட்டு அதை தடுத்ததாகவுன் அமைச்சர் எஸ் பி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -