எப்.முபாரக் -
திருகோணமலை.சேறுநுவர பொலிஸ் பிரிவுற்குற்பட்ட செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும். மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் தோப்பூர்-செல்வநகர் நூறூ வீட்டுத்திட்டம் பகுதியைச்சேர்ந்த 15-16 வயதுடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.
குறித்த மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்ததாகவும் இருவர் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக சேறுநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படங்கள்;அஸ்மி ஏறாவூர்