தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்தும்போது..
கிழக்கு மாகாணப் பாடசலைகளில் 5021 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதனை வெளிப்படுத்தாது மறைக்கப்பட்டுள்ளதனை நான் அறிந்து அதிகாரிகளுக்கு அது சம்மந்தமாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளேன். ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து இம்முறை வெளியாகியுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்துக்கே நியமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளேன்.
கிழக்கில் பாரிய ஆளணித் தட்டுப்பாடு காணப்படுகிறது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் விட்டதவறினால் இன்று அவைகள் எல்லாவற்றையும் சேர்த்து ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 1134 வெற்றிடங்கள் காணப்பட்டது. அதுபோல் இன்று 5021 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ளன.
கல்விப்பணிப்பாளரின் தகவலின் படி இன்று ஆரம்பப் பிரிவுக்காக 279 ஆசிரியர்களும், கணிதப் பிரிவுக்காக 411 ஆசிரியர்களும் ஆங்கிலத்துக்காக 365 ஆசிரியர்களும் விஞ்ஞானத்துக்காக 36 ஆசிரியர்களும் இதர பாடங்களுக்குமாக இவ்வெற்றிடங்கள் இருக்கின்றன என்று தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலைகளுக்கு என்றும் இல்லாதவாறு இவ்வருடம் பாரிய நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த நிதிகளின் மூலம் நீடித்து நிலைக்கக் கூடிய திட்டங்களுக்களை வினைத்திறன் மற்றும் விளை திறனுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாகாணக் கல்விக்குழுவினருடன் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திக் குழிவினரையும் அழைத்து கலந்துரையாடும் நிகழ்வு இரண்டாம் நாளாகவும் இன்று இடம்பெற்றது.
குறித்த இக்கலந்துரையாடல்கள் காத்தான்குடி அல்-ஹிரா மகாவித்தியாலயம், ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயம், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயம், மற்றும் முதலமைச்சின் ஏறாவூர் காரியாலயத்திலும் இடம்பெற்றன.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் எம்.ரி.நிஷாம், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சேகு அலி, கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டு தங்களின் நிர்வாகத்தின் கீழுள்ள பாடசாலைகளின் தேவைகளையும், குறைகளையும் எடுத்துக்கூறியதுடன், உடனடியாகப் பூர்த்தி செய்யக் கூடிய தேவைகளை உடன் நிறைவேற்றிக் கொடுப்பதற்கும் முதலமைச்சர் அதிகாரிகளைப் பணித்தமை குறிப்பிடத்தக்கது.