எப்.முபாரக்-
2016-09-28. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றினை உடைத்து பொருட்களை திருடிய நபயொருவருக்கு பிணைக்கு கையொப்பம் இட்ட நபரை அடுத்தமாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று புதன்கிழமை (28) உத்தரவிட்டார். திருகோணமலை,பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை பகுதியில் கடந்த வருடம் கடையொன்றினை உடைத்து பொருட்களை திருடிய சந்தேக நபருக்கு குறித்த பிணையாளர் கையொப்பம் இட்டிருந்தார். கடையை உடைத்து பொருட்களை திருடியவர் வழக்குத் தவணைகளுக்கு செல்லாது தலைமரைவாக இருக்கும் நிலையிலே பிணையாளரை செவ்வாய்கிழமை(27) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பிணையாளரை புதன்கிழமை(28) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.