அமானுல்லாஹ் வீதி வடிகான் புனரமைப்பிற்காக 17 இலட்சம் ரூபா நிதி ஒதிக்கீடு..!

ஹைதர் அலி -
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியினால் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமானுல்லாஹ் வீதி வடிகான் புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த திங்கள் (26.09.2016) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் ஏனைய அதிதிகளாக நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் இணைப்பாளர் ULM. முபீன் (BA), காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் மர்சுக் சின்னலெப்பை மற்றும் காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM. ஸாபி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். 

அமானுல்லாஹ் வீதியில் மழை காலங்களில் அதிகளவான மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு, மக்களின் மிக நீண்ட கால தேவையாக காணப்பட்ட இவ்வீதிக்கான வடிகானினை அமைத்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகிடம் மக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ்வீதியின் வடிகான் புனரமைப்பிற்காக கிழக்கு மாகாண சபை மூலம் சுமார் 17 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -