வர்த்தகர் சகீப் சுலைமான் கொலை தொடர்பில் முக்கிய ஆதாரம் வெளியாகியது..!

ம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கடத்தலை அவருக்கு மிக நெருக்கமாக இருந்த ஒருவரே அவரின் சகாக்களுடன் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தப்பட்டுள்ள சகீப் சுலைமான் தொடர்பான தகவல்களை நன்கு அறிந்த அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் மூலம் கடத்தல் திட்டமிடப்பட்டுள்ள அதேவேளை அவரின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டுவந்த அவரது ஊழியர் மீதே பலத்த சந்தேகம் திரும்பியுள்ளது.

வர்த்தகர் சகீபிற்கு நெருங்கியவர் மூலம் திட்டமிட்ட அடிப்படையில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ள அதேவேளை கடத்தப்பட்டுள்ள போது கடத்தல் காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் (கடத்தல் முயற்சியின் ஆரம்ப கட்டத்திலே) சகீப் உயிரிழந்துள்ளமையை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

சகீபை கடத்திச் சென்று அவரின் தந்தையிடம் கப்பம் பெறுவது கடத்தியவர்களின் திட்டமாக இருந்த போதும் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலில் கடத்தப்பட்டு ஒருமணி நேரத்துக்குள் அவர் உயிரிழந்ததுள்ளதாலேயே கடத்தல்காரர்கள் அவரின் சடலத்தை ஹெம்மாதுகம பிரதேச காட்டுப்பகுதியில் விட்டு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

21 ஞாயிறு இரவு கடத்தப்பட்ட சகீப் சுலைமானின் சடலம் மீட்கப்பட்ட போது அவர் உயிரிழந்து நான்கு நாட்கள் கடந்திருந்தாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கைகள் மூலம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனடிப்படையில் அவர் கடத்தப்பட்டு தினமே கொலைசெய்யப்பட்டுள்ளமை ஊர்ஜிதமாகியுள்ளது.

இந்த புலன் விசாரனைகளின் திருப்புமுனையாக (ஆள் இறந்து விட்ட நிலையிலும் அதனை காட்டிக் கொள்ளாமல் ) சகீப் சுலைமானின் தந்தையிடம் கப்பம் கேட்டு தொலைபேசியில் அழைப்பு விடுத்த இருவர் கேகாலையில் இருந்த கொம்யுனிகேசனின் சீ சீ டீ வி சாட்சியங்கள் மூலம் பொலிஸார் அடையாளம் கண்ட பின்னர் அவர்களை பிடித்து மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் பின்னர் அவர்கள் வெளியிட்ட தகவல்களை அடுத்து இந்த கடத்தல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய மற்றையவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ள பொலிஸாருக்கு கடத்தல் மற்றும் கொலை தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -