எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தை இன்னும் 45 நாட்களில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு, செலவுத்திட்டத்தில் அரச, தனியார் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் எனக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றனர் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அமெரிக்க யுசெய்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில் இன்று ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.