மாகாண சபை உறுப்பினரின் வாகனத்திற்கு கல்வீச்சு - ஆறு பேர் கைது

மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பயணித்த வாகனத்தின் மீது கல் வீசி தாக்கியதாக கூறப்படும் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வத்தளை ஒலியாமுல்லை பகுதியில் அமைக்கப்படவுள்ள தமிழ் பாடசாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் காணி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கலந்துக்கொண்டதன் பிறகு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மூவரில் பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை வத்தளை பிரதம பூர்ணிமா கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மூவரை பிணையில் விடுதலை செய்துள்ளதோடு மேலும் மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -