அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40) கப்பல் 500 மாலுமிகளுடன் நாளை கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்த ஆண்டில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது அமெரிக்கப் போர்க்கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான எரிபொருள் நிரப்பும் பயணமாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் இந்த வருகை சாதாரண ஒன்றாக அமைந்திருப்பதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு வந்தடையும் யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் (ஏ.எஸ்-40) போர்க்கப்பலில் 500 மாலுமிகள் வரை பணியாற்றுகின்றனர். இவர்கள் சுமார் ஒருவார காலம் இலங்கை தரையில் விடுமுறையைக் கழிக்கவுள்ளதாகவும் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரக அறிக்கை கூறுகிறது.