ஏறாவூர் மிச்நகரில் இன்று (16) ஏற்பட்ட மினி சூறாவளியினால் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் அப்பகுதியிலிருந்த பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
இன்று நன்பகல் வேளையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் போது பனை மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தபால் ஊழியர் ஒருவரின் மேட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் ஆகியோர் பொதுமக்களின் உதவியோடு தீயைக் கட்டுப்படுத்தவதற்கான முயற்ச்சிகளை மேற்கொண்டதுடன் மின்சார சபையினரோடு தொடர்பு கொண்டு திருத்த வேலைகளை மேற்கொண்டு குறித்த பகுதிகளுக்கான மின்சாரத்தினை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.