தாய்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணாக வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதில் கடந்த ஆட்சியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வடக்கின் இளைஞர் மற்றும் தொழில் முனைவர்களுக்கு வேலை வாய்ப்புக்களுக்கு சந்தர்ப்பமளிக்கும் வகையில் அலுமினிய பொருள் உற்பத்தி நிறுவனமொன்று நேற்று (13) தெல்லிப்பளையில் திறந்து வைக்கப்பட்ட போதே தெரிவித்தார்.
யுத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் மனநிலையை மாற்றியமைக்கும் வகையில் அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த முதலீட்டாளர்களை கடந்தகால அரசாங்கம் நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை எனவும் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.