காரியாலயச் செய்திப்பிரிவு-
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் அவர்களின் சொந்தக் காணிகளிகளிலேயே குடியேற முடியாத நிலையில் இருக்கிறார்கள் இது சம்மந்தமாக இம்போட்மிரர் ஊடக வலையமைப்பினர் யாழ்பாண விஜையத்தின் போது வடமாகாண ஆளுநர் ரெஜினேட் குரே மற்றும் யாழ் மாவட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் ஆகியோரைச் சந்தித்து உரையாடினர் அதன் விரிவாக்கம்.
கேள்வி:
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் அவர்களின் சொந்தக் காணிகளிகளிலேயே குடியேற முடியாத நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. நீங்கள் வடமாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் அவர்களைக் குடியமர்த்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்...?
பதில்:
பதிலினைத் தமிழிலேயே கூறுகிறார் சிரித்துக்கொண்டு..
நான் ஆளுநராக பதவியேற்று வந்த பின்னர் என்னுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இது சம்மந்தமாகப் பேசினர் அதனால் நான் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறேன்.
யார் யார் காணிகளை இழந்தார்களோ அவர்களின் காணிகளை அவர்களிமே ஒப்படைக்கப்படும்.
கேள்வி:
வெளியேறிய மக்களின் காணிகளை சிலர் பிடித்து அதற்கு போலியான உறுதிகளை முடித்து வைத்துள்ளனதாக அறிகிறோம். இதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறீர்கள்.
பதில்:
அப்படி இன்னும் யாரும் வரவில்லை அவர்கள் சரியான ஆவனங்களை எடுத்துக்கொண்டு எம்மிடம் வந்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு காணிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரையில் காணிக்குரியவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர்களை வரச்சொல்லுங்கள் என்று கூறி சிரிக்கிறார்.
இம்போட்மிரர்:
எனவே மக்களைக் குடியேற்றுங்கள் என்று கூறினால் மாத்திரம் போதாது குறிப்பிட்ட காணிகளுக்குரிய மக்களை அவர்களின் காணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் சென்று பெற்றுக்கொள்ள அறிவுரை வழங்க வேண்டும்.
அதன் பின்னர்தான் யார் யாருக்கு அவர்களின் சொந்தக் காணிகள் கிடைக்கவில்லை என்னும் உண்மைகளை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட பேட்டி வீடியோ வடிவில் வெளியிடப்படும்.