சுகாதார அமைச்சுக்கு மேலும் ஒரு பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால உட்பட வைத்திய நிருவாக அதிகாரிகள் 14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறைக்கு இன்னுமொரு பணிப்பாளர் தேவையில்லையென இவர்கள் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
ஒரு வருடத்துக்கு 100 பில்லியன்களுக்கு அதிகளவில் செலவு செய்யும் அமைச்சுக்களுக்கு புதிதாக நிதி மற்றும் கணக்கு தொடர்பான பணிப்பாளர் நாயகங்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவித்தே இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.