திருகோணமலை மாவட்டப் பகுதியில் ஆயுதக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன -படங்கள்

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர கன்னியா வீதியிலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான பையொன்று கிடப்பதாக பொது மக்கள் சர்தாபுர விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அப் பையிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (14) குறிப்பிட்ட இடத்திற்குச் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் மானவடுகே தலைமையிலான குழுவினர் சென்று பையினை சோதனைக்குட்படுத்திய போது மோட்டார் துவக்குகளுக்கு பயன்படுத்துகின்ற 12 ரவைகள் அதனுடைய பீஸ்கள் 12, டொம்பா துப்பாக்கி ரவைகள் 12,கைக்குண்டுகள்04 , கிளைமோர் குண்டுகள் 03 மீட்கப்பட்டு உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சர்தாபுர விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு குறித்த ஆயுதங்களை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டும் வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -