திருகோணமலை மாவட்டப் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான டிப்ளோமாபயிற்சிநெறிக்கான அங்குராப்பண வைபவம் திருகோணமலை ரோட்டரிக்கழக நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பபட்டது..
இதன் ஆரம்ப நிகழ்வு 20 ஆம் திகதி மாலை 2.30 மணிக்கு திருகோணமலை ரோட்டரிக்கழகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபானி பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.. ரோட்டரிக்கழக நிதியுதவியுடனும் ஆறுதல் நிறுவனத்தின் நடைமுறைப்படுத்தலுடனும், இக் கற்கை நெறிஇடம்பெறவுள்ளது.
80 ஆசிரியர்களுக்கான இப் பயிற்சி மூதூர் ,திருகோணமலை ஆகிய பிரதேசங்களில்நடைபெறும்.
இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக முன்னாள் ஆளுநர் திரு தர்சன் ஜோன், கிழக்கு மாகாண முன் பள்ளி அமையப் பணிப்பாளர் பொன் செல்வநாயகம், திருகோணமலைமுன் பள்ளி இயக்குனர் திரு ச வரதசீலன் மற்றும்முன் பள்ளி அமைய வளவாளர்களும்,கலந்து கொண்டார்கள்..
இவ் வைபகத்துக்கு திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் திரு ச சிவசங்கர் அவர்கள்தலைமை தாங்கினார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபானி தமது உரையில்பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சிநெறியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அவர்களது எதிர்கால சுபிட்சத்தை முன்னிட்டு ஒழுங்காக பங்கு பற்றும்படி எடுத்துரைத்தார்.
இறுதியாக திருகோணமலை றோட்டரிக் கழக பொது உறவு தலைவர் டாக்டர் ஈ. ஜீ.ஞானகுணாளன் நன்றிஉரை நிகழ்தினார்.