பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தைத் தவிர வேறு மருத்துவம் இருக்கிறதா என்றுகூடத் தெரியா காலமும் இருந்து வந்தது. அத்துடன் ஆங்கில வைத்தியம் மட்டும்தான் நவீன மருத்துவம் என்றும் மற்றதெல்லாம்நாட்டு வைத்தியம் என்று ஆங்கில வைத்தியத்தை நம்பி வாழ்ந்து வந்தார்கள் இன்று ஆயுர்வேத வைத்தியத்தில் கூடிய கவனத்தை செலுத்தி வருவதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.நக்பர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று (31) இடம்பெற்ற தொற்றா நோய் சிகிச்சை தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘கண்ட்ரி மெடிசின்’ என்று மிக அதிகமானவர்கள் ஆங்கில மருத்துவத்தை நம்பி நவீன முறையில் மருத்துவத்தை பெற்றுவந்தவர்கள் இன்று ஆயுர்வேத வைத்தியத்தை நாடி வருகின்றனர். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் நமது உயிரையும் உடலையும் தன்னிச்சையாகக் கையாளுவதற்கு உரிமைகிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி அறிந்துகொள்ள நமக்கு முழு உரிமை உண்டு.இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப்பற்றியும் சொல்வதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள்.
எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத் துறைகளைப் போலவும் மருத்துவத் துறையை அவர் படித்திருக்கிறார்கள்.அதேபோல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப் பார்வை கொண்டவை என்றால்,ஆங்கில மருத்துவ முறை முதலாளித்துவத் தத்துவப் பார்வை கொண்டது. நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில்மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது.
ஆனால், நமக்குத் தேவை மானுடமயமான தத்துவப் பார்வை கொண்ட மருத்துவம். அது, அடிப்படையில் சமூகம்சார்ந்ததாக இருக்க வேண்டும். தெளிவான தத்துவ நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். எந்த ரகசியங்களோ,மர்மங்களோ இல்லாததாக, இயற்கையின் விதிகளுக்கு ஏற்பச் செயல்படுகிற மருத்துவமாக இருக்க வேண்டும்.பக்கவிளைவுகள் இல்லாத எளிமையான, இனிமையான, முழுமையான நலனை மீட்டுத் தரக்கூடிய ஒரேயொரு வைத்தியமுறை என்றால் அது ஆயுர்வேத வைத்திய முறையே என்றார்.