ஓ/எல் எந்தப் பாடாசலையில் தோற்றினாரோ அந்த மாவட்டத்திலேயே பல்கலைக்கழக அனுமதி - இராதக்கிருஸ்னன்

அஷ்ரப் ஏ சமத்-
ல்கலைக்கழக இசட் ஸ்கோா் வெட்டுப்புள்ளி ஆக்க குறைந்த மாவட்டமான நுவரெலியா, புத்தளம் மாவட்டங்களில் 2 மொழிகளிலும் வெளி மாவட்டங்களது மாணவா்கள் இம்முறை உயா்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனா். இவா்கள் பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனா். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 17 பாடசாலைகளில் 200 க்கும் மேற்பட்ட மாணாவர்கள் இம் முறை பரீட்சை எழுதுவதாகத் தெரியவந்துள்ளது.

இவ் விடயத்தினை எனது கவணத்திற்கொண்டு வந்து கல்வியமைச்சின் செயலாளா், பரீட்சை ஆணையாளா் உட்பட குழு வொன்று இவ்வாறு வெளிமாவட்டங்களில் இருந்து அனுதி வழங்கிய பாடாசலை அதிபா் வலயக் கல்விப் பணிப்பாளா்களை பரீசீலனை செய்து உடனடி பதவி நீக்கப்பட உள்ளனா். 

இவ்வாறு அனுமதிகளுக்கு அதிபா்கள் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு பணம்பாிமாறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வாழ்க்கையிலேயே பாடசாலைக்கு வாராத மாணவா் பரீட்சை எழுதுகின்றனா். இவா்கள் நுவரேலியாவில் நட்சத்திர ஹோட்டலில் தங்கி நின்று பரீட்சை எழுதுகின்றனா். ஒரு மாணவி ஆண்கள் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றகின்றாா். 

என கல்வி இராஜாங்க அமைச்சா் வீ. இராதக்கிருஸ்னன் இன்று (10) கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தாா். 

மேலும் இராஜாங்க அமைச்சா் தகவல் தருகையில் ;

இம் மாணவா்கள் க.பொ.சாதாரணம் எந்தப் பாடாசலையில் தோற்றினாரோ அந்த மாவட்டத்திலேயே பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படல் வேண்டும் நுவரேலியாாவில் மலையக மாணவா்களது பல்கலைக்கழக கோட்டாவை வெளிமாணவா் குறைந்த புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்கிறாா்கள் இவ் விடயம் கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இம்முறையே இது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அதிபா்கள் பாடசாலை அனுமதி வழங்கி பரீட்சைக்கு தோற்றுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளாா். ஒரு மாணவா் இப்பாடசாலையிலேயே கல்வி கற்றதாக தெரிவித்துள்ளாா். 

ஆனால் சக மாணவரிடம் இந்தப் பாடாசலையின் கழிவரை எங்கு உள்ளது எனக் கேட்கின்றனராம். பாடசாலைக்கே வராமால் உயா்தரப் பரீட்சைக்குத் தோற்ற மட்டும் இங்கு வந்துள்ள மாணவா்களது பாடசாலை அனுமதி பரீடசை அனுமதி, அடையாள அட்டை, வதிவிடம் என்பன பரீசிலிக்கபடும். 12 மாவட்டங்கள் குறைந்த புள்ளி பெரும் மாவட்டமாக இருந்தாலும் இம் மாணவா்கள் நுவரேலியா, புத்தளம், மொன்றாகலை ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வந்து பரீட்சை எழுதுகின்றனா். இரண்டு மொழி மாணவா்கள் ்இதில் சம்பந்தப்பட்டுள்ளனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -