ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 'செமட்ட செவண' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு 70 மில்லியன் பெறுமதியான (விசிர நிவாச) காசோலைகள் மற்றும் வீடுகளைப் புனரமைப்புதற்கான உரிமைப்பத்திரங்கள் என்பன வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை 13 மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆசிர்வாதத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 422 பேருக்கு வீடமைப்பு காசோலையும் 89 தச்சுத் தொழிலாளிகளுக்கு தொழில் உபகரணங்கள் 215 பேருக்கு சீமெந்து வாங்குவதற்கான சான்றிதல்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், பிரதியமைச்சர் எம்எஸ்எம் அமீர் அலி மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் பிஎஸ்எம் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உரிய ஆவணங்களை வழங்கி வைத்தனர்.