கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நிரந்தர சமாதானத்தையும், தேசிய நல்லினக்கத்தையும் ஊக்குவித்தலில் ஊடகங்களின் வகிபங்கு எனும் தொனிப்பொருளில் இரண்டு நாள் (13,14) வதிவிட செயலமர்வு பொலன்னருவை ரமதா விடுதியில் நடைபெற்று வருகின்றது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர. இச்செயலமர்வு நேற்று சனிக்கிழமை(13),யும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் (14) நடைபெருகின்றது. இதில் நிலைமாற்று நீதி,மற்றும் புரிந்துணர்வு இன்மை,மக்களின் கருத்துக்களுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இச்செயலமர்வினை யு எஸ் எயிட் நிறுவனமும்,சட்டம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன் வளவாளர்களாக சட்டத்தரணி ஐங்கரன்,இலங்கை ஊடக மன்ற கல்லூரி விரிவுரையாளர் ஸ்ரீ பிருந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.