நோயாளர்கள் சுகதேகிகளாக வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே இந்த உபகரணங்களை வழங்கி வைத்துள்ளேன் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (31) தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆண்கள் விடுதிக்கு சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கட்டில், மேதை, வேட்சீட், நேயாளர்களின் பாவனைக்கான லொக்கர் போன்ற உபகரணங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (31) வழங்கி வைத்தபோது மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நேயாளர்களுக்கு வைத்திய சேவைகள் செய்ய என்னென்ன தேவைகள் தேவைப்படுகின்றதோ அந்த தேவைகளை என்னிடம் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு தெரிவிக்கின்றபோதுதான் அத்தேவைகளை என்னால் நிவர்த்தி செய்ய முடியும். வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி, வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படவேண்டும். இவ்வாறு செயற்பட்டால் தான் இங்கு வைத்திய சிகிச்சைகளைப் பொறவருகின்ற நோயாளர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சைகளை வழங்க முடியும்.
அது மாத்திரமல்லாமல் நோயாளர்களிடம் மிக அன்பான முறையிலும் நடந்துகொள்ளவேண்டும். இப்படி நடந்துகொள்வதன் மூலம் நோயாளர்கள் மிக விரைவில் குனமடைந்து செல்லவார்கள். அவர்களின் வைத்திய சிகிச்சைகளுக்கு என்ன தேவைப்பாடுகள் தேவைப்படுகின்றதோ அத்தோவைகளை என்னிடம் உடனடியாக அறியத்தரவேண்டும் என்றார்.