பல பெண்களை நாமலுக்கு அறிமுகம் செய்த நபர் யார்...? தேடுதல் வேட்டை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் தினம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல பெண்களை நாமலுக்கு அறிமுகம் செய்து வைத்த நபர் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விமான பணிப்பெண் நித்யா சேனானி சமரநாயக்க மற்றும் சுஜானி போகொல்லாகம ஆகிய இருவரையும் நாமலுக்கு அறிமுகப்படுத்தி வைத்து சம்பிக்க கருணாரத்ன என்ற நபர் தற்போது தேடப்பட்டு வருகிறார். FCID 82/15 என்ற நிதி மோசடி விசாரணை பிரிவு ஆவணங்களின் கீழ் இவர் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நித்யா, விமான பணிப் பெண்ணாக செயற்படும் சந்தர்ப்பத்தில் கவர்ஸ் கோப் நிறுவனத்தில் பணிப்பாளராக செயற்பட்டுள்ளதாக தற்போது வரையில் தெரியவந்துள்ளது. அத்துடன் சுஜானி, நாமல் ராஜபக்ச உரிமையாளராக செயற்படும் என்.ஆர்.எஸோசியேட்ஸ் நிறுவனத்தில் ஜெனரால் பதவியில் செயற்பட்டுள்ளார். சம்பி, சஷிந்திர ராஜபக்சவினாலே நாமலுக்கு அறிமுகமாகியுள்ளார். சம்பி, சஷிந்திர ராஜபக்சவுடன் நெருக்கமாக செயற்பட்டுள்ள நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் அவரை விலகி ஷிரந்தி ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராக செயற்பட்டுள்ளார்.

பின்னர் அவருடனும் இருந்து விலகி நாமல் ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்பை வைத்து வந்துள்ளார். சம்பிக்கு “கப்பம் சம்பி“ என்ற பெயர் ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பிக்க கருணாரத்ன கடந்த ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சில் இணைப்பு செயலாளராகவும், மரக் கூட்டுத்தாபனத்தில் இயக்குனராகவும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சில் அதிகாரியாகவும், நாமல் ராஜபக்சவின் கீழ் செயற்பட்ட தருணயன்ட ஹெடக் அமைப்பின் அமைப்பாளராகவும், நில் பலகாய அமைப்பில் பிரதான அமைப்பாளராகவும், செயற்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபை, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள் மற்றும் கடற்படை நடவடிக்கை அமைச்சில் மூன்று சம்பளங்கள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவராகும். அத்துடன் அரச மர கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடிக்கு குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர் அரசாங்க பணத்தை மோசடியான முறையில் பயன்படுத்திமை தொடர்பில் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றில் 25000 ரூபாய் பிணை மற்றும் 2 மில்லியன் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஒருவராகும்.

அவரது வீட்டில் இருந்து ஒரு கிலோவும் 106 கிராம் நிறையுடைய 10 தங்க பிஸ்கட்களையும் நிதி குற்ற விசாரணை பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -