எம்.வை.அமீர் -
மிஸ்ரோ அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 2016.08.28 ஆம் திகதி சாய்ந்தமருது இளைஞர் வள நிலைய கேட்போர்கூடத்தில் அவ்அமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மிஸ்ரோ அமைப்பின் ஆலோசகரும் இலங்கை அரச வர்த்தககூட்டுத்தாபனத்தின் அமைச்சின் தொடர்பாடல் அதிகரியும் அந்நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் செயலாளர்ருமான அஹமட் லெப்பை முக்தார் (ஜாஹான்) கலந்து அமைப்பின் எதிர்கால திட்டங்களை திட்டமிடுவது தொடர்பாகவும், அமைப்பின் ஊடாக பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அமைப்பினால் முன்னெடுக்கவேண்டிய முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
அத்துடன் எதிர்வரும் 2016.09.05 ஆம் திகதி சாய்ந்தமருது தலைவர் அஷ்ரப் சிறுவர் பூங்காவின் பின்பகுதி கடற்கரை பிரதேசத்தை சிரமதான அடிப்படையில் அமைப்பின் பூரண அனுசரணையுடன் துப்பரவு செய்வது என்றும் அதற்கு சகலரதும் ஒத்துழைப்பைப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.