மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ள மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்விசிறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தற்போது (31) இடம்பெற்று வரும் குறித்த ஆர்ப்பாட்டம், நுகேகொட, தெல்கந்த விஜேராமவில் ஆரம்பிக்கப்பட்டு, கொள்ளுபிட்டியவை வந்தடைந்த வேளையில் அவர்களை கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீச்சி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறியதாலேயே குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் தற்போது (31) தம்புள்ளையில் இடம்பெற்று வரும் இறுதிப் போட்டியைக் காண்பதற்காக வந்த இரசிகர்கள், அதற்கான நுழைவுச்சீட்டு தீர்ந்தமையால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இடத்தை விட்டு அகலுமாறு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட உத்தரவை மீறிய இரசிகர்கள், குருணாகல் - கொழும்பு வீதியை மறித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
குறித்த பகுதியின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பில் கருத்திற்கொண்ட பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீச்சி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
thinakaran