50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது

க.கிஷாந்தன்-

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய பகுதியில் தாழிறக்கம் காரணமாக 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. அத்தோடு மேலும் அப்பகுதியிலிருந்த 4 வீடுகள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு முற்றாக சேதமாகியுள்ளது.

இச்சம்பவம் 07.08.2016 அன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால் அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாக இவ்வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஏற்கனவே அதிகாரிகள் ஊடாக அனுப்பப்பட்டதன் காரணமாக உயர் ஆபத்துகளும், காயங்களும் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டுள வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -