அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இடைக்காலத் தீர்வு...!

ம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட கருப்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க, நிதியமைச்சில் இன்று (21) வியாழக்கிழமை மாலை அமைச்சர் ரவி கருநாணாநாயக்கவின் தலைமையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இவற்றில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், தயா கமகே, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், உயரதிகாரிகள், கைத்தெரி நெசவாளர்கள் மற்றும் கரும்புச் செய்கையாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றினர்.

இவர்களின் பிரச்சினைகளுக்கு இடைக்கால தீர்வும், தொடர்ந்து நிரந்தரத் தீர்வும் காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த வியாழக்கிழமை, கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை மீள் பரிசீலனை செய்து, மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை பற்றி தீர்மானிப்பதற்கு இன்னொரு கட்ட பேச்சுவார்த்தை நிதியமைச்சில் நடைபெறும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க பங்குபற்றிய அமைச்சர்களிடமும், ஏனையவர்களிடமும் உறுதியளித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -