ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு...!

பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பொலிஸ் மா அதி­ப­ரிடம் நேற்றைய தினம் முறைப்­பா­டொன்று செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி பொது­ப­ல­சேனா அமைப்பு கிரு­லப்­ப­னையில் பெளத்த மத்­திய நிலை­யத்தில் நடாத்­திய ஊடக மாநாட்டில் ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளையும் இஸ்­லாத்­தையும் பற்றி தவ­றான கருத்­துக்­களை வெளி­யிட்டும் புனித குர்­ஆனை இலங்­கையில் தடை செய்ய வேண்­டு­மெ­னவும் தெரி­வித்த கருத்­துகள் தொடர்பில் விசா­ரணை நடத்­தும்­படி முறைப்­பாட்டில் கோரப்­பட்­டுள்­ளது.

இம்­மு­றைப்­பாட்­டினை பொரளை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் உப தலை­வரும் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் உப தலை­வ­ரு­மான எம்.எம்.எம். ரிகாஸ் சட்­டத்­த­ரணி எம்.ஏ.எம். சித்தீக் ஊடாக சமர்ப்­பித்­துள்ளார்.

முஸ்­லிம்­களின் தற்­பா­து­காப்பு கரு­தியும் இந்த முறைப்­பாடு முன்­வைக்­கப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 8 ஆம் திகதி ஊடக மாநாட்டில் ஞான­சார தேரர் புனித குர்ஆன் தீவி­ர­வா­தத்தை ஊக்­கு­விப்­ப­தா­கவும் உலமா சபைக்கும் தேசிய சூரா கவுன்­ஸி­லுக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்­பதை தாம் கற்­பித்துத் தரு­வ­தா­கவும் சவால் விட்­டி­ருந்தார்.

ஞான­சார தேரரின் இவ் உரை தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -