தனியான உள்ளூராட்சி சபையை வலியுறுத்தி சாய்ந்தமருது அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் குத்பாவும், துஆ பிரார்த்தனையும்..!

எம்.வை.அமீர் -
நீண்ட நாள் கோரிக்கையான சாய்ந்தமருத்துக்கான தனியான உள்ளூராட்சி கோரிக்கை,கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தரப்பால்துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்டு, பிரதமரை கல்முனைக்கு அழைத்துவந்து அவரது வாயாலும் "சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கித் தரப்படும்" என்றுவாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில், ஆண்டுகள் கடந்து வருகிறதே தவிர, இதற்கான முஸ்தீபுகள் இதுவரை சோபை இழந்த நிலையில் காணப்படுவதாலும், மீதமாயிருந்த கல்முனை மாநகரசபை உட்பட ஏனைய உள்ளூராட்சி சபைகளும் தற்போழுது கலைக்கப்பட்டுள்ள நிலையிலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்கள் பூர்த்தியடைய உள்ள நிலையிலும், 2017முதல்காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான நிலையிலும், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாஸல் நம்பிக்கையாளர் சபை நிர்வாகக் கூட்டம் இது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (20)சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது இவ் உள்ளூராட்சி மன்ற விவகாரம் விரிவாக ஆராயப்பட்டு, நாளை (22) வெள்ளிக்கிழமை, சாய்ந்தமருது - மாளிகைக்காடு பகுதியில் உள்ள 6 ஜும்மாபள்ளிவாசல்களிலும் உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பாக மக்களை விழிப்படையச்செய்வதுடன், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் விதத்தில் குத்பா பிரசங்கங்களை மேற்கொள்வதெனவும், இதன் நிறைவேற்றத்துக்காக இறைவனைமன்றாடும் விதத்திலான விசேட துஆ பிரார்த்தனைகளையும் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதாக சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஐ. அப்துல் மஜீட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -