பாலமுனை முஹா வின் கடலோரத்து மணல் கவிதை நூல் அறிமுக விழா..!

அய்ஷத்-
லவே ஏற்பாடகி நாட்டில் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கவிஞர் பாலமுனை முஹா வின் "கடலோரத்து மணல்" கவிதை நூல் அறிமுக விழா பா ஏந்தல் கலாபூஷணம் பாலமுனை பாறூக் தலைமையில் 2016.07.16 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பாலமுனை இப்னுஸீனா கனிஷ்ட வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சர், கவிஞர் கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவிருக்கும் இந் நிகழ்வில் கவிஞர் சோலைக்கிளி அவர்கள் இலக்கிய அதிதியாக கலந்து கொள்கிறார்.

கெளரவ அதிதிகளாக..
*சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் எம்.பைசால் காஸிம் அவர்களும்
*விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும்
*பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும்
*கிழக்கு மாகண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களும்
*கிழக்குமாகண சபை கெளரவ உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, ஏ.எல்.தவம், ஆரீப் சம்சுடீன் ,கே.எம.ஏ.றஸ்ஸாக், ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகளாக..
கிழக்கு முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காஸீம் அவர்களும், பிரதேச செயலாளர்களான ஐ.எம்.ஹனீபா, எஸ்.எல்.எம்.ஹனீபா, ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோரும் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் மற்றும் அம்பாரை மாவட்ட கலாசார இணைப்பாளர் ஏ.எல்.தெளபீக், ஜெஸ்கா அமைப்பின் தலைவர் அஷ்ஷேக் ஹாஸிம் சூரி அவர்களும் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

முதன்மை பிரதிகளை..

ஸ்ரீலமுகா அம்பாரை மாவட்ட பொருளாளர் ஏ.சி.எஹ்யாகான், அக்கரைப்பற்று எம்.ரி.அஹமட் லெவ்வை, சின்னப் பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் உதுமாலெவ்வை, முன்னால் பிரதேச சபை உறுப்பினரும் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான எஸ்.எல்.முனாஸ், அதிபர் ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் ஜேபீ ஆகியோர் பெறவுள்ளனர்.

நூல் மீதான உரையை கவிஞர் சிறாஜ் மஸ்ஹூர், கவிஞர் மன்சூர் ஏ காதிர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளதுடன்,

அன்புரைகளை கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் அவர்களும் கவிஞர் எஸ் ரபீக் அவர்களும் வழங்கவுள்ளனர்.

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினர் இந் நிகழ்வை ஏற்பாடு செய்து அனுசரனை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -