மறைந்துவிட்ட அந்த என் தோழர்களை இன்று நான் ஜனநாயக இளைஞர் இணைய தம்பிமார்களில் காண்கிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனநாயக இளைஞர் இணையம் கொழும்பில் நடத்திய “வாழும்போதே வாழ்த்துவோம்” நிகழ்ச்சி தொடரில் கவிஞர் வேலணை வேணியன் தொடர்பான பணிநலன் பாராட்டு விழாவில் தலைமை உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இங்கு உரையாற்றிய வடமாகாண முதல்வர் தாம் எது சொன்னாலும், எது செய்தாலும் அவற்றை ஆராயாமல், வெறுமனே தூற்றி திரியவே ஒரு கூட்டம் வடக்கில் திரிவதாக சொன்னார். அது அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் பொருத்தமானது. என்னை தூற்றுவதையே முழு நேர தொழிலாக கொண்ட ஒரு சிறு கூட்டம் இங்கும் இருக்கிறது. இவர்களில் இருந்து நமது புதிய தலைமுறை இளைஞர்கள் இன்று மாறுபடுகிறார்கள். தூற்றி திரிவோர் மத்தியில், போற்றி திரியும் வேலையை இன்று ஜனநாயக இளைஞர் இணைய இளைய தலைமுறை ஆரம்பித்துள்ளது. இந்த ஜனநாயக இளைஞர் இணையத்துக்கு, ஜனநாயக நாற்று மேடை என்ற இன்னொரு காரணப்பெயரும் உண்டு. எதிர்காலத்தை நோக்கிய புதிய தலைமையை நான் இந்த இளைஞர் இணையத்தின் ஊடாக உருவாக்கி வருகிறேன். இவர்கள் இன்று இந்த மேடையில் நாற்றப்படும் நாற்றுகள். இந்த நாற்றுகளுக்கு நானும், பிரதி தலைவர் வேலணை வேணியனும், நீரூற்றி, உரமிட்டு வளர்க்கிறோம். நாடு முழுக்க இந்த இணையம் வளர வேண்டும். பெருந்தொகையில் நம் இளைஞர்கள் இதில் இணைய வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் எல்லா தரப்பு தமிழர்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தன் கட்சிக்குள் உள்வாங்கியுள்ளதாக விக்கினேஸ்வரன் பாராட்டினார். இந்த கருத்து பலரது கண்களை திறக்க வேண்டும். முதல் நாள் மலைநாட்டு தோட்ட தொழிலாளர்களுக்காக, தோழமை கட்சிகளுடன் இணைந்து மத்திய கொழும்பில் சத்தியாகிரகம் செய்ய என்னால் முடிகிறது. இரண்டாம் நாள், வடக்கில் பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பது தொடர்பில் பிரதமருடனும், துறைசார் அமைச்சர் பி. ஹரிசனுடனும்,கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனும், முதல்வர் விக்கினேஸ்வரனுடனும் உரையாடி ஒரு பொது கருத்தை உருவாக்க ஒத்துழைக்க என்னால் முடிகிறது. மூன்றாம் நாள், வட கொழும்பில் வாழும் ஏழை எளிய மக்களின் வீடுகளை உடைத்து அவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சியை நேரில் ஸ்தலத்துக்கு சென்று தடுத்து நிறுத்த என்னால் முடிகிறது. இது மட்டுமல்ல, முஸ்லிம், சிங்கள உடன்பிறப்புகள் தொடர்பாகவும் குரல் கொடுக்க, களத்தில் இறங்க என்னால் முடிகிறது. இதுதான் நான். இதுதான் ஜனநாயக மக்கள் முன்னணி. இதில்தான்,வேலணையில் பிறந்து, யாழ் இந்து கல்லூரியில் பயின்று, பின்னர் தமிழ்நாடு சிதம்பரம் நாவலர் கலாசாலையில் வித்துவானாக தகைமை பெற்று, பொகவந்தாலாவையில் பண்டகசாலை பொறுப்பாளாராக தொழிலை ஆரம்பித்து, இன்று தலைநகரில் வேரூன்றி பணிசெய்யும் வேலணை வேணியன், பிரதி தலைவராக இருக்கின்றார்.
எங்கள் கட்சி ஒரு குடும்பம். இதன் மூத்த உறுப்பினர் வேலணை வேணியன். அவரிடம் இருந்து கட்சி என்ற இந்த குடும்பத்துக்கு துரோகம் செய்யாத, கட்சி தலைமை மீது விசுவாசம் கொண்ட கொள்கையை அனைவரும் கற்று அறிய வேண்டும். இந்த குடும்பத்தில் இருந்து எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்றவில்லை. எவரையும் உள்ளே வர வேண்டாம் என நான் தடுக்கவும் இல்லை. ஆனால், எவரும் எனக்கு நிபந்தனைகள் போட்டு கட்சிக்குள் இருக்கவும் முடியாது. உள்ளே வரவும் முடியாது. கட்சிக்குள் நட்பு, பாசம், எளிமை ஆகியவற்றைப்போல், கடமை,கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றையும் நான் பேணி வருகிறேன்.