துருக்கியில் மலர்ந்து மக்களால் அழிவுற்ற இராணுவ ஆட்சியும் ரஜப் தையிப் அர்துகானின் ஆளுமைகளும்...!

துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதி புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது இதுதான் ஒரு சில நாட்க்களுக்கு முன்னர் சூடான செய்தி பொருளாதரத்தில் முன்னேரி வரும் துருக்கியில் ஏன் இவ்வாறு நடைபெற வேண்டும் இந்த இராணுவ ஆட்சியால் மேற்க்குலகம் சாதிக்க நினைப்பது எதனை என்பதை ஒவ்வொருவரும் அறிந்த கொள்வது அவசியமான ஒன்றாகும்.

துருக்கி என்பது பெரும் பகுதியை அதாவது (97% பகுதி) ஆசியாவிலும், மிகச் சிறிய பகுதியை (3% பகுதி) ஐரோப்பாவிலும் கொண்டுள்ள புவியியல், ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு ஆகும் .

துருக்கியில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதியை தேர்தல் முறையில் மக்களே தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை ஒன்றை அறிமுகம் செய்து அந்தத் தேர்தலின் முடிவில் 52% சதவிகித வாக்குகள் பெற்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதியாக 60 வயதான ரஜப் தையிப் அர்துகான் வெற்றிவாகை சூடி தனது ஆட்சியை ஜனநாயக ஆட்சியின் பக்கம் திருப்பி அமைதியான பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

ரஜப் தையிப் அர்துகான் ஜனாதிபதியாவதற்க்கு முன்னர் இஸ்தான்புல் நகரத்தின் மேயராகவும், மூன்று முறை துருக்கியின் பிரதமராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் 2011 –ல் பிரதமர் பொறுப்புக்கு வருவதற்க்கு முன்னர் ஐரோப்பியாவின் நோயாலி என்று அழைக்கப்பட்ட துருக்கி பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி பெற்றது.

இன்று உலகப் பொருளாதார வளர்ச்சியில் துருக்கியின் பொருளாதாரம் 16ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஜி- 20 நாடுகளில் துருக்கியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய வருமானம் ஜிடிபி 9% வளர்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பாவில் பொருளாதார ரீதியாக ஜெர்மனி பெற்றுள்ள வளர்ச்சியை விட இது 3 மடங்கு அதிகம். வேலையில்லா பட்டதாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. லஞ்சமும் ஊழலும் குறைந்துள்ளது என்று ஐரோப்பிய கவுன்சிலின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இதையெல்லாம் விட மிகக் குறிப்பாக 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இஸ்லாமிய விழுமியங்களை மறந்து ஐரோப்பியர்களின் மதச்சார்பற்ற மலட்டுச் சிந்தனையின் பக்கம் சாய்ந்திருந்த துருக்கியில் பல வருடங்களாகத் தடை செய்யப்பட்டிருந்த இஸ்லாம் இன்று வாழ்வியலாக மாறுவதற்கான சுதந்திரம் இருக்கிறது. இஸ்லாமிய விழுமியங்களோடு வாழ்வதற்கான உரிமை மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. 

இது இவ்வாறு இருக்கும் போது இந்த சமூகத்தை நசுக்கி நாசம் செய்ய வேண்டும் என்பதற்க்காக இரண்டாவது உலகமகா யுத்தத்தில் ஜப்பான் நாட்டின் இரு நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடாத்திய அமெரிக்கா தன்னை உலகத்தின் ஒரு அசைக்க முடியாத சண்டியனாக பிரகடனப்படுத்தியதுடன். அதுவரைக்கும் இங்கிலாந்து உலக நாடுகளை கைப்பெற்றி ஆட்சி செய்து வந்ததுடன், இஸ்லாத்துக்கு எதிராக அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு உலகிற்கு தன்னை ஒரு சண்டியனாக காண்பித்துக்கொண்டிருந்தது

இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்துவந்த இங்கிலாந்து அரசு, இரண்டாவது உலகமகா யுத்தத்துக்கு பின்பு தனது தலைமை பொறுப்புக்களை அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் வழங்கிவிட்டு பின்னணி செயற்பாட்டாளராக சியோனிச நாடுகள் தமது திட்டங்களை கட்டவிழ்த்து விட ஆரம்பித்தது.

அதன் முதல் கட்ட நடவடிக்கையாக 1950 இல் அத்னான் மந்த்ரீஸ் என்பவர் துருக்கியின் பிரதமராக இருந்த காலப்பகுயில் இஸ்லாமியவாதிகளுக்கு ஆதரவு வழங்கனான் என்ற காரணத்தினால் 1959 காலப்பகுதியில் ஒரு திட்டத்தை தீட்டினார்கள் அந்தத்திட்டம் 1960 காலப்பகுதியில் இராணுவம் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததுடன் அத்னான் மந்த்ரீஸ் மற்று அவருடை ஆட்சியில் மந்திரிகளாக இருந்த சிலருக்கும் தண்டனை வழங்கி தூக்கிலிட்டு கொன்றது.

அவ்வாறு நடைபெற்ற இராணுவப் புரட்சி தோற்றுப் போக 1970 க்குப் பிறகு இஸ்லாமிய சிந்தனையாளரும், அடிப்படையில் பொறியளருமான நஜ்முதீன் அர்பகான் எனும் ஆளுமை பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களையும், சிந்தனையாளர்களையும் இணைத்துக் கொண்டு ஒரு கட்சி ஆரம்பித்தார். பின்னர் பல பிரச்சனைகளுக்கிடையே பல்வேறு பெயர்களில் கட்சி நடத்திய அவர் மதச்சாற்பற்ற கட்சி ஒன்றுடன் 1973 இல் துனை பிரதமராக செயல்பட்டார் .

இந்த நிலையில் அமெரிக்கா இஸ்ரேல் ரஷ்யா பேன்ற சியோனிச நாடுகள் தமது திட்டங்களை மீண்டும் இரண்டாம் கட்டமாக கட்டவிழ்த்து விட ஆரம்பித்த்து அதுதான் 1980 க்குப் பின் மீண்டும் ஒரு இராணுவப் புரட்சி ஏற்பட்டு அர்பகான் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். 

அர்பகான் சிறையில் இருந்து விடுதலையான பின்பு மீண்டும் எழுச்சியுடன் செயல்ப்டத் தொடங்கினார். இதன் பலனாக 1996 ஆம் ஆண்டு அர்பகான் அவர்கள் துருக்கியின் பிரதமராக பொறுப்புக்கு வந்தார். இவர்தான் 1924 கிலாபத் வீழ்ச்சிக்கு பிறகு பொறுப்புக்கு வந்த முதலாவது இஸ்லாமியவாதியாவார்.

பின்னர் மீண்டும் அமெரிக்கா இஸ்ரேல் ரஷ்யா பேன்ற சியோனிச நாடுகள் தமது திட்டங்களை மீண்டும் மூன்றாம் கட்டமாக கட்டவிழ்த்து விட ஆரம்பித்த்து அதுதான் துருக்கி இராணுவம் அர்பகான் அவர்களது ஆட்சியை கவிழ்த்தது.

ஆனால் இராணுவ ஆட்சி நிடிக்கவில்லை சில நாட்கள் கழித்து மீண்டும் அர்பகான் பழீலா என்ற பெயரில் ஒரு கட்சியை 2000 இல் ஆரம்பித்தார். அதே கால கட்டத்தில் அர்பகான் அவர்களின் மாணவரும் தொடர்ந்து அவரோடு கட்சிப் பணிகளிலும் ஆட்சிப் பணிகளும் உடன் பயணித்தவருமான இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ரஜம் தயுப் அர்துகான் 1994 – 1998 வரை இஸ்தான்புல் நகர மேயராக இருந்து சீரழிந்து போன அந்த நகரை செல்வாக்கு மிக்க நகராக மாற்றினார்.

அர்துகான் பிரதம மந்திரியாக பொறுப்பு ஏற்றார் அன்றிலிருந்துதொடர்ந்து மூன்று தடவை பிரதமராக பொறுப்பு வகித்து ஜனாதிபதியாக பொறுப்புக்குவந்த பின்னர் 2009 இல் அர்துகானுடைய அரசுக்கு எதிராகவும் அமெரிக்கா இஸ்ரேல் ரஷ்யா பேன்ற சியோனிச நாடுகள் தமது திட்டங்களை மீண்டும் நாண்காம் கட்டமாக ஒரு புரட்சியின் பக்கம் திசைதிருப்பத் திட்டமிட்டது. ஆனால் அது ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டது.

அந்தப் புரட்சியின் பின்னர் அர்துகானினால் இதுவரை காலமும் துருக்கியில் இருந்து வந்த இஸ்லாத்திற்கு எதிரான அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டு,இராணுவத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டன.

2009 காலப் பகுதிகளின் பின்னர் துருக்கியில் போர் கப்பல், டாங்கிகள், ஆளில்லா தானியங்கி விமானம், செயற்கை கோள் என இராணுவத்துறை வளர்ச்சி. ஐரோப்பாவின் நோயாளி என்றழைக்கப்பட்ட துருக்கி உலகப் பொருளாதாரத்தில் 111 இடத்திலிருந்து 16 வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஏற்றுமதி அதிகரிப்பு, தனி நபர் வருமானம் அதிகரிப்பு உலக வங்கியிடம் கடனில்லாத நாடு துருக்கி. 2023 இல் 3,00,000 அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்க இலக்கு.10 ஆண்டுகளில் 2,771,000,000 மரங்கள் நடப்பட்டுள்ளது.

அல்குர்ஆனும், ஹதீஸும் அரசு பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 90% மாணவர்கள் அதை தாமாகவே தேர்வு செய்கிறார்கள். 8 ஆண்டுகளில் புதிய கல்விக் கூடங்கள், பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள் எழுப்பப்பட்டுள்ளது.

இவைகள் அனைத்தையும் பொறுக்க முடியாத அமெரிக்கா இஸ்ரேல் ரஷ்யா பேன்ற சியோனிச நாடுகள் தமது திட்டங்களை மீண்டும் ஐந்தாம் கட்டமாகவும் திறந்து விட ஆரம்பித்த்து அதுதான் 2016 ம் ஆண்டு 15ம் திகதி ஜூலை மாதம் நல்லிரவு நேரம் இராணுவம் தமது வேலைகளை ஆரம்பித்தது ஆனால் உலகமே வியக்கும் வகையில் ரஜப் தையிப் அர்துகானினால் அந்த இராணுவப் புரட்சியை அடக்க முடிந்தது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட என்னை நீக்குவதற்க்கு மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அர்துகான் எப்போதும் கூறுவார் அவரின் இந்த வார்த்தைகள்தான் அன்று நடைபெற்ற இராணுவப் புரட்சிக்கு எதிராகக் கலமிறங்கியவர்கள் அனைவரும் பொது மக்களாக இருந்தனர்.

ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, பாலஸ்தீன், லெபனான், எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் முடிவில்லாத இரத்த ஆறுகளை ஓடச்செய்துவிட்டு தனது நாட்டில் அமைதியை பேணும் அமெரிக்காவானது, தனது நாய்க் கொள்கையை துருக்கியிலும் அவ்வாறான ஒரு முயற்சிக்கு இராணுவ புரட்சி மூலம் வித்திட்டது. ஆனால் அந்த அமெரிக்காவின் முயற்சி அல்லாஹ்வின் உதவியினால் முறியடிக்கப்பட்டது. இந்த இராணுவ புரட்சி முறியடிப்பானது துருக்கி இராணுவத்தின் தோல்வி அல்ல. மாறாக இதற்கு பின்னணி வகித்த அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற இஸ்லாத்தின் எதிரிகளுக்கு கிடைத்த படுதோல்வி ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -