இறுதிப் போட்டியிலும் இலங்கை தோல்வி...!

ங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் 122 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 - 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

ஆரம்பத்தில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

அதன்படி இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 324 ஆட்டங்களை குவித்தது. 

சிறப்பாக விளையாடிய ரூட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 105 பந்துகளில் 92 ஓட்டங்களை சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

அதிகபட்சமாக சந்திமால் 53 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -