இஸ்லாமிய சட்டமே உலக அமைதிக்கு ஒரே தீர்வு...!

ரு தலை காதல் என்ற பெயரில் தமிழகத்தில் தொடர்ச்சியாக எண்ணற்ற படுகொலைகள் நடந்து வருகிறது.

காதலை ஏற்றுக்கொண்டால் கற்பை சூறையாடுகிறார்கள் , காதலை ஏற்க மறுத்தால் மரணத்தை பரிசாக தருகிறார்கள்.

காதலை ஏற்க மறுத்த சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் வெட்டி வீசப்பட்டார்.

காதலை ஏற்க மறுத்த ஆசிரியை வினுப்பிரியாவின் முகத்தை மார்ஃபிங் செய்து ஆபாச உடலில் பொருத்தி முகநூலில் வெளியிட்டார்கள். அவமானம் தாங்க முடியாமல் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

காதலை ஏற்க மறுத்த வினோதினியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்கள். சிகிச்சை பலனின்றி வினோதினி உயிரிழந்து விட்டார்.

காதலை ஏற்க மறுத்த வித்யாவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்கள். சிகிச்சை பலனின்றி வினோதினி உயிரிழந்து விட்டார்.

நான்கு மலர்களையும் கொன்று குவித்த கொலைகாரர்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு தான் நான்கு மரணத்தை மேற்கோள் காட்டியுள்ளோம், இதுப்போல் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவங்கள் பெருகிய போது ஆசிட் கடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக காவல்துறை,

இதனால் எந்த வித பலனும் ஏற்படவில்லை, ஆசிட் இல்லையென்றால் அரிவாள் என்று கொலைகாரர்கள் பெருகி கொண்டே செல்கிறார்கள்.

கொலை சம்பவங்கள் நடைபெறும் பொழுது நான்கு நாட்களுக்கு பரபரப்போடு பேசப்படுவதாலோ, தொலைக்காட்சி TRP ரேட்டிங்குக்காக விவாதம் நடத்துவதாலோ இதுப்போன்ற இரக்கமற்ற படுகொலைகளை தடுத்து விட முடியாது.

ஒரே தீர்வு இஸ்லாமிய சட்டம் !!

இஸ்லாமிய சட்டப்படி ஆசிட் ஊற்றியவனின் முகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் இதுதான் இஸ்லாமிய சட்டம்.

கொலைக்கு மரண தண்டனை, கற்பழிப்புக்கு மரண தண்டனை,

இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் எந்த நாடுகளிலும் காதலுக்காக பெண்கள் கொல்லப்பட்டதில்லை, மாறாக பெண்களை கண்டாலே 10 அடி தூரம் ஆண்கள் ஒதுங்கி செல்லும் நிலையே இருக்கிறது.

இஸ்லாமிய சட்டமே உலக அமைதிக்கு ஒரே தீர்வு...
மு. மு.மீ-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -