ஓ மரமே... தீயில் முளைத்தாய் வெந்தணலில் வேகுவாயோ...!

ஓ மரமே...!
வித்திழந்து போனோரும் 
உன்னை விற்று பணம் பார்த்தோரும்
செத்து மடியும் வரை – அவர்கள் 
செல்வங்கள் அழியும் வரை 
கத்தி முடித்து – அவர்கள் 
கருமங்கள் முடியும் வரை 
கந்து நீ விடு – அவர்கள் 
கலங்கி வீழட்டும் 

தீயில் முளைத்தாய் 
வெந்தணலில் வேகுவாயோ 
வேர்களை இழப்பாயோ – வெறும் வேடிக்கை
இவர்கள் பேச்சு 

கூத்து முடியும் – இவர்கள் 
கூடாரமும் கவிழும் 
காற்று வீச – இவர்கள் 
கதையும் முடியும்

நேற்று வரை நடந்ததில் 
நினைவை இழந்து 
காத்திருந்து - உன் 
கதை முடிப்பார்களோ?...

நீ என்ன சேற்றில் முளைத்தவனா?
செதுக்கி எறிய... 
ஊற்றி வளர்த்தவன் – எம்
உயிர் தந்து காத்தவன்
பொத்திப் பொத்தி – எம் 
பெண்களெல்லாம் போர்த்தி 
இறைவனிடம் இறைஞ்சி 
இரு கரம் ஏந்தி 
ஊட்டி வளர்த்தவன் – எம் 
உள்ளத்தில் புதைந்தவன் 

ஓ மரமே!...
நீ செய்த்தூனின் வம்சம்
செய்த்தான்களுக்கு வன்மம் 
உன் இலைகளில் மருந்துண்டு
சதைகளில் ஊறிய நோயும் – இவர்கள் 
சதுரங்களில் ஓடும் குருதியும் 
உன்னால் பிணி நீங்கும் – இவர்கள் 
உள்ளங்கள் தூய்மை பெறும்

கோடிகளை இவர்கள் காணலாம்
உன் கொடியினை அசைக்க முடியாது
நீ பாரசீகத்தை வென்றவன்
பெரும் படையணி கண்டவன்
குறைசிகளிடமா மண்டியிடுவாய்
மண் கௌவுவாய் 
இப்னு உபையின் சதியும் 
அபுலகப்பின் மண் தூறலும் 
அபூஜஹில்களின் திமிரும் 
உன்னை அசைக்க முடியாது

ஓ மரமே!...
நிமிர்ந்து பார் - நமது 
கலக்கமற்ற வானம் விரிந்து - ஒளியாகி 
நமது நம்பிக்கை புலர்கிறது
நமது விடியலைத் திருட – இவர்கள்
விண்ணின் மைந்தர்கள் அல்ல 
அல்லாஹ்வின் அருள் இருக்கும் வரை 
நாம் அடங்கப் போவதுமில்லை 
அல்ஹம்துலில்லாஹ்... 
-தவம்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -