இலங்கையின் ஒலிம்பிக் கனவு இம்முறை பலிக்க வேண்டும் - திருகோணமலை சிறைச்சாலை அதிகாரி

எப்.முபாரக்-
லங்கையின் ஒலிம்பிக் கனவு இம்முறையும் பலிக்க வேண்டும் அதற்காக அனைத்து இன மக்களின் ஆசிர்வாதமும் இன்றியமையாதது என திருகோணமலை சிறைச்சாலை அதிகாரி பிரசாத் ஹேமந்த தெரிவித்தார். 

திருகோணமலை நகரில் இன்று புதன்கிழமை (20) ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் விளையாட்டு வீரர்களை வாழ்த்தியும் ஒலிம்பிக் தீபத்தினை வழியனுப்பும் நிகழ்வு திருகோணமலை நகரில் ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:நமது தாய் நாட்டில் அனைத்து மக்களும் வாழ்கின்றார்கள் ஒரு செயற்பாட்டுக்கோ அல்லது போட்டிகளுக்கோ அனைத்து மக்களின் எண்ணங்களும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.

அத்தோடு அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் மக்களையும் விழிப்புணர்வூட்ட வேண்டிய கடப்பாடு இருக்கின்றது இவ்வாறு மேற்கொள்வதன் மூலமாகவே விளையாட்டுத்துறை விருத்தியடையும் ஏழாவது நாளாக திருகோணமலை நகரை வந்தடையும் ஒலிம்பிக் தீபத்தினை அனைத்து இன மக்களும் கௌரவிக்க வேண்டும்.அத்தோடு இந்த வேலைத்திட்டங்களுக்கு இளைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -