"செய்த் ராத் ஹுஸைனுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல்"

னித உரிமைகள் பரிந்துரைகளை மீறி இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுஸைனுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்ய வெளிநாட்டிலுள்ள இலங்கை புத்திஜீவிகள் குழுவொன்று தீர்மானம் செய்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு மீது சுமத்தியுள்ள நிபந்தனைகள், பரிந்துரை 38 இற்கும் 35 இற்கும் முரணானது எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்படின், உலக வரலாற்றில் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகமொன்றுக்கு வழக்குத் தாக்கல் செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாக பதியப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கை தொடுப்பதற்கு பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணியொருவர் முன்வந்துள்ளதாகவும் வெளிநாட்டிலுள்ள புத்திஜீவிகள் குழுவின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -