இஸ்லாமிய ஆட்சியும் சிறுபான்மையினரும்...!

ன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சிறுபான்மையினர் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மத அடிப்படையில் பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆனால், 1400வருடங்களுக்கு முன்பே 25 இலட்சம் சதுரமைல் பரப்பளவைக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் (கிலாபத்தில்) சிறுபான்மையினராக வாழ்ந்த ஆர்மீனியக் கிறிஸ்தவர்கள் எப்படி சகல உரிமைகளையும் பெற்று, சட்ட பாதுகாப்போடு வாழ்ந்தார்கள் என்பதற்கு கீழே கூறப்படும் நிகழ்வுகள் சிறந்த ஆதாரங்களாக அமைந்துள்ளன.

1905ஆம் ஆண்டு கிழக்கு ரஷ்யாவின் அஸார்பைஜான் மாகாணத்திலுள்ள ஆர்தபைன் எனும் கிறிஸ்தவ மடாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கலிபா ஹஸரத் அலி (ரலி) அவர்களால் வரையப்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கைப் பத்திரம் சிறந்ததோர் அத்தாட்சிப் பத்திரமாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்லாமிய ஆட்சியின் (கிலாபத்தின்) நான்காவது கலீபாவாகிய (ஜனாதிபதி) முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மருமகனான அலி (ரலி) (கி.பி.656 – 661) அவர்களினால் தனது ஆட்சியின் கீழிருந்த அஸார்பைஜான் மாகாணத்தின் ஆளுநருக்கு (கவர்னர்) தங்களது கைப்பட அரபு கூபி எழுத்து வடிவில் எழுதப்பட்ட கடிதமாகும், அதன் விவரங்கள் முதலில் ரஷ்ய

பத்திரிகைகளில் வெளிவந்தன. அடுத்து, “ஹப்லுல் மதீன்”என்ற பத்திரிகையில்1906ஆம் ஆண்டு அல்-ஹுகம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பிரதிகள் துருக்கி, கெய்ரோ மற்றும் பெய்ரூத் ஆகிய நகரங்களில் வெளியிடப்பட்டன. அதன் அசல் பிரதி இன்றும் ரஷ்யாவிலுள்ள நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் கலீபா (ஜனாதிபதி) அலி (ரலி) அவர்கள் பின்வருமாறு அஸர்பைஜான் கவர்னருக்கு எழுதியிருந்தார்.“அஸர்பைஜானிலுள்ள ஆர்மீனியக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு, அவர்களின் சொத்துரிமை, சமுதாய அந்தஸ்து,அவர்களின் கௌரவம் அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் மதசுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இக்கட்டளை எல்லா அதிகாரிகளினாலும், அவர்களுக்குப் பின் வரும் அதிகாரிகளினாலும் பின்பற்றப்பட வேண்டும். அங்குள்ள, கிறிஸ்தவர்கள்; முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதற்காக இம்சைக்குட்படுத்தப்படவோ,கௌரவகுறைவாகவோ நடாத்தப்படக் கூடாது. அவர்கள் நாட்டுக்கும், அரசுக்கும் துரோகமிழைக்காமல் விசுவாசமாக இருக்கும் வரையில் அவர்கள் துன்புறுத்தப்படவோ,இம்சைக்குட்படுத்தவோ கூடாது. தங்களுடைய மதத்தை சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் அனுஷ்டிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும்.

“இஸ்லாம் சமாதானத்தைப் போதித்து சமுதாயத்தின் நிலையை அபிவிருத்தி செய்யும்படிதான் கூறுகிறது. நாங்கள் எங்கிருந்தாலும் எங்கு போனாலும் சமூகங்களுக்கிடையில் நட்புறவையும், ஒத்துழைப்பையும் உருவாக்குவது எமது கடமையாகும். எனவே, முஸ்லிம்கள் எல்லாமக்கள் மத்தியிலும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதோடு– எக்காரணம்

கொண்டும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தவறாக உபயோகிக்கவோ கூடாது. சிறுபான்மையினரை அவமானப்படுத்தக்கூடாது. மேலும், தங்களது வீடுகள், நிலம் மற்றும் வியாபரத் தளங்களிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது, அவர்களுடைய மதகுருமார்கள் தகுந்த மரியாதையோடு கவனிக்கப்பட வேண்டும்.

“மடாலயங்கள் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும் – தமது மதப்பிரச்சாரங்களை சுதந்திரமாக மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். தேவாலயங்களில் நிகழ்த்தப்படும் மதப்பிரச்சாரங்கள் தடைசெய்யப்படக்கூடாது. அவர்கள்,தங்களது வணக்கஸ்தலங்களை நிர்மாணிப்பதற்கு நிலம் கேட்டால் தகுதியான – பெறுமதி மிக்க நிலங்கள் வழங்கப்பட வேண்டும். யார் இந்த கட்டளைகளை மீருகின்றார்களோ - அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் ரசூல் (ஸல்) அவர்களுக்கும் விரோதமாக செயல்படுகிறார்கள் என்று கருதப்பட்டு – தெய்வீக கோபத்துக்குள்ளாவார்கள்.”

இந்தக் கட்டளைகளை உள்ளடக்கிய கடிதம் (பத்திரம்) அன்றைய இஸ்லாமிய ஆட்சியில் (கிலாபத்தில்) – எந்தளவு முஸ்லிமல்லாத மாற்று மதத்தவர்களுக்கு மதசுதந்திரம் உட்பட, மதசகிப்புத்தன்மையோடுகூடிய நேசத்தன்மை மற்றும் சமூக அந்தஸ்து என்பன வழங்கப்பட்டிருந்தன என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

கலீபா (ஜானதிபதி) அலி (ரலி) அவர்களுடைய ஆட்சியில் நடந்த மேலும் இரண்டு சம்பவங்களை ஞாபகப்படுத்துவதின் மூலம் அவர்களின் இஸ்லாமிய ஆட்சி எந்தளவு நீதி நேர்மையாக

இருந்தது என்பதற்கு அத்தாட்சியாய் அமையும் என்று எண்ணுகிறேன்.:

கலீபா அலி (ரலி) அவர்களுடைய ஆட்சியில் ஒரு யூதன் கலீபா அலி (ரலி) அவர்களுடைய யுத்த கேடயத்தை திருடிவிட்டான். இது பற்றி கலீபாவினால் காதி நீதிபதியிடம் முறையிடப்பட்டது. விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டது. நீதிபதி கலீபாவைப். பார்த்து “கலீபாவே! இது உங்கள் கேடயம் என்பதற்கு ஏதாவது சாட்சியங்கள் உண்டா?” என்று கேட்டார். கலீபா அலி (ரலி) அவர்கள் அதற்கு “இதோ! என் மகன் ஹஸன் (ரலி) யும் எனது வேலையாலும் உள்ளனர். என்றார். அதற்கு, நீதிபதி (காதி) அவர்கள் கலிபாவைப் பார்த்து“இஸ்லாத்தில் உறவினர்களுடைய சாட்சியங்களும் வேலைகாரர்களுடைய சாட்சியங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

என்றும், வேறு சாட்சியங்கள் இல்லாத படியால் கேடயம் யூதனுடையதுதான் என்று தீர்ப்பு வழங்குகிறேன்.” என்று வழக்கை முடித்தார். கலீபா அலி (ரலி) அவர்கள் இத் தீர்ப்புக்கு தலை சாய்த்தவண்ணம் விலகிச்சென்றார்கள். இந்த நேர்மையையும் - பெருந்தன்மையும் – இஸ்லாமிய நீதி முறைமையையும் கண்ட யூதன் உண்மையைக்கூறி கேடயத்தை கலிபாவிடம் திருப்பிக் கொடுத்து இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டான். இது வரலாற்றில் ஒரு சுவடியாகும்.

இதே போன்று இன்னொரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். – ஒரு சாதாரண குடிமகனின் குற்றச்சாட்டின் பேரில்; கலீபா அலி (ரலி) அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றார்கள்.. வழக்கு தினமன்று இருவரும் நீதிமன்றில் ஆஜரானார்கள். கலீபாவைக் கண்ட நீதிபதி

மரியாதையின் நிமித்தம் எழுந்து நின்றார். இதனை அவதானித்த கலீபா அலி (ரலி) வழக்காளியைப் பார்த்து “நீ உனது வழக்கை

வேறு நீதிபதியிடம் கொண்டுசெல். ஏனெனில், இந்த நீதிபதி எனக்கு எழுந்து நின்று மரியாதை செய்ததினால், நீ இவரிடம் இருந்து உரிய நீதியைப் பெற்றுக் கொள்ளமாட்டாய்”- என்றார்கள்.

இதிலிருந்து விளங்குவது யாதெனில், தான் பெரும் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்தாலும், தனக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதியை மதித்தும் – தனக்கு மரியாதை செலுத்திய நீதிபதியை கண்டித்தும் தனது எதிரியிடமே உண்மையை விளக்கிய கலீபா அலி (ரலி) போன்றோர் இஸ்லாமிய ஆட்சியில் – சாதாரண பொதுமக்கள்– அவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக இருந்தபோதும்கூட – அவர்களுடைய உயிர் - உடமை –நிலவுரிமை, வாழ்வாதாரம், மத சுதந்திரம் – மதப் பிரச்சாரம் –பிற வணக்கத்தலங்கள் என்பவற்றுக்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பு வழங்கினார்கள் என்பது நமக்கு நன்கு புரிகின்றது. 

எனவே, இஸ்லாமிய ஆட்சி சிறுபான்மையினத்தவர்களுக்கும் வேற்றுமதத்தவர்களுக்கும் பூரண பாதுகாப்பு வழங்கிய ஆட்சியாகவே இருந்தது என்பது நன்கு புலனாகின்றது. இத்தகைய நீதிவழுவா ஆட்சிமுறைகள் நிலவுமேயானால் இன்றைய நாடுகள் அனைத்தும் சமாதான பூங்காவாக மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.

எஸ்.சுபைர்தீன்,
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -