பலம் பெரும் நடிகர் மரிக்கார் எஸ்.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் - இராதாகிருஸ்ணன்

பா.திருஞானம்-
லங்கையின் பலம் பெரும் நடிகரும் கோமாளிகள் புகழ் மரிக்காருமான எஸ்.ராமதாசின் மறைவு இலங்கை கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல் அவருடைய ஆளுமை திறமை என்பன அவருக்கு நிகர் அவரே. அவரது துயரால் கலை உலகே கலங்கிப்போயிருக்கின்றது. தமிழ் மற்றும் சிங்கள மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கோமாளிகள் புகழ் மரிக்கார் எஸ்.ராமதாசின் மறைவு இலங்கை கலைத்துறையை பொறுத்தவரை ஒரு பாரிய இழப்பாகும். இலங்கையில் ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு நிகராக படங்களை தயாரித்து 100 நாட்கள் இலங்கை திரையரங்குகளில் ஓட்டி சாதனை படைத்தவர் மறைந்த மரிக்கார் எஸ்.ராமதாஸ். குறிப்பாக அவருடைய நடிப்பில் வெளிவந்த வி.பி.கணேசன் எழுதி தயாரித்த நான் உங்கள் தோழன் அவருடைய சொந்த தயாரிப்பான கோமாளிகள் ஏமாளிகள் போன்ற திரைப்படங்களை இலங்கை ரசிகர்கள் இன்றும் மறக்கவில்லை.

மறைந்த மரிக்கார் எஸ்.ராமதாஸ் வானொலி, மேடை நாடகங்களில் பெரும் புகழ்பெற்று விளங்கிய ஒரு நடிகர். இந்திய வம்சாவளி தமிழரான நடிகர் ராமதாஸ் இலங்கை வானொலியில் தனக்கென ஒரு தனியிடத்தை பதித்திருந்தவர். வானொலி மூலமாக பல நாடகங்களை அரங்கேற்றியவர். மரிக்கார் எஸ்.ராமதாஸ் என்றால் அவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. 

இன்று அவர் இலங்கையில் இருக்கின்ற பொழுது இறந்திருப்பாராக இருந்தால் இந்த ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசமும் மரியாதையும் தெரியவந்திருக்கும். அவருடைய நடிப்புகள்; இன்றும் எம் கண் முன் தெரிகின்றது. இவருடைய இழப்பு என்றுமே ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு எனவும் தனது அனுதாப செய்தியில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -