வாய்மூல வினா விடை நேரத்தின் போது இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேராவிடம் போதை பொருள் தொடர்பான கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர் உதயன் கம்மன்பில கேட்டிருந்தார்.
எனினும், குறித்த கேள்விகளால் சிறப்புரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதன்போது அவமதிப்பவர்கள் பாராளுமன்றத்திற்கு தகுதியற்றவர்கள் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பிலவை எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த கேள்விகளை ஹன்சாட்டில் இருந்து அகற்றுமாறும், பொருத்தமற்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம் எனவும் சபாநாயகர் உதயகம்மன்பிலவுக்கு அறிவுறுத்தியுள்ளார். (ஸ)