திருகோணமலையில் ஒசுசல விற்பளை நிலையம் திறக்கக் கோரிக்கை - பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்

திருகோணமலை மாவட்டத்தில் ஒசுசல மருந்து விற்பனை நிலையமொன்றைத் திறக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவிடம் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கொரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் அமைச்சரை நேரில் சந்தித்த இம்ரான் எம்.பி திருகோணமலை மாவட்டத்தில் ஒசுசல மருந்து விற்பனை நிலையம் இல்லாததால் இப்பகுதி மக்கள் மருந்துகளை நியாய விலையில் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும்சில மருந்துகளைப் பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

எனவே. திருகோணமலை மாவட்ட மக்களின் நன்மை கருதி ஒசுசல மருந்த விற்பனை நிலையமொன்றை இம் மாவட்டத்தில் திறந்து வைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் அமைச்சரிடம் முன் வைத்தார்.

இதனை செவிமடுத்த அமைச்சர் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதி அளித்ததோடு இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -