இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்த சந்திப்பு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் குசல் பெரேராவிற்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் குசல் பெரோவிற்கு எதிரான தடையை நீக்கியிருந்தது.
இந்நிலையில் குசல் பெரேராவின் பரிசோதனைக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் பவுண்டுகளை நஷ்டஈடாக வழங்கும்படி இலங்கை கிரிக்கெட் சபை கோரியிருந்தது.
குறித்த நஷ்டஈட்டினை சர்வதேச கிரிக்கெட் வரியம் வழங்க முன்வந்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.