"சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய அவசர தேவைக்கு யஹ்யாகான் பௌன்டேசன் நிதி உதவி"

எம்.வை.அமீர்-

சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் அவசர தேவை ஒன்று தொடர்பில் அப்பாடசாலையின் அதிபர்எம்.எஸ்.நபாரினால் யஹ்யாகான் பௌன்டேசனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமான யஹ்யாகானிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து 2016-07-04 ஆம் திகதி குறித்த பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அதிபரால் சுட்டிக்காட்டப்பட்ட அவசர தேவையான சுற்று மதில் பகுதியை பார்வையிட்டதுடன் குறித்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியை கட்டி முடிப்பதற்காக ஒரு தொகை அடங்கிய காசோலையை அதிபரிடம் ஸ்தலத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

இங்கு கருத்துத்தெரிவித்த அதிபர் எம்.எஸ்.நபார்;

 தான் வேண்டிக்கொண்டதும் உடனடியாக குறித்த இடத்துக்கு வருகைதந்தது மட்டுமல்லாது உடனடியாகவே எதிர்பாராதவிதமாக குறிப்பிட்ட ஒரு தொகைக்கான காசோலையையும் தந்துதவியதற்காக பாடசாலையின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -