தனியார் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனிவீடுகள் அமைக்கப்படும் - திலகர் எம்பி

பெருந்தோட்ட கம்பனிகள் (RPC), மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் (SLSPC) நிறுவனங்களைப் போன்று மலையகப்பகுதிகளில் தனியாருக்கச் சொந்தமான சிறு தேயிலைத் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கும் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்து வருகிறார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளை, நீட்வுட் தனியார் தோட்டத்தில் மண்சரிவு ஆபத்தை எதிர்கொள்ளும் மிகவும் மோசமான குடியிருப்புகளில் வாழும் பதினொரு குடும்பங்களுக்கு தனிவீடுகளை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்களுக்கு தனி வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நிக்ழ்ச்சி நிரல் ஒன்றை நாம் இப்போது மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் தனிவீடு எனும் எண்ணக்கருவுக்குள் காணி உரிமையும் நிலைநாட்டப்பட்டு வருகின்றது.

பெருந்தோட்ட கம்பனிகள் (RPC), மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் (SLSPC) நிறுவனங்களைப் போன்று மலையகப்பகுதிகளில் 50 ஏக்கர் தோட்டங்கள் எனும் தனியாருக்கச் சொந்தமான சிறு தேயிலைத் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் (PHDT) செயற்பாடுகள் இல்லை. எனவே அமைச்சு மட்ட அபிவிருத்தி முன்னெடுப்புகள் இங்கு வருவதில் சிக்கல் நிலவுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளை பெறுவதிலும் இந்த மக்கள் அதிக சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று நீட்வுட் தோட்டத்தில் பதினொரு வீடுகளைப் பெற்றுக் கொடுக்க நாம் பல்வேறு தடைகளைக் கடக்க வேண்டி இருந்தது. இந்த தோட்டத்தின் உரிமையாளர் காணியைப் பெற்றுக் கொடுக்கு முன்வந்தபோதும் அவற்றை விடுவிப்பதுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்கள், தனிநபர்கள் தடையை ஏற்படுத்த முயன்றனர். இந்த மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் வேறு அரச ஊழியர்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு தேவை என தொழிலாளர்களுக்கு அதனை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. நாம் அந்த தடைகளை உடைத்துக் கொண்டே இன்று அடிக்கல் நாட்டுகிறோம். 

அமைச்சர் திகாம்பரம் அதற்கான பலத்தை எமக்கு தந்துள்ளார். அவரின் பிரதிநிதியாகவே இன்று நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன். தோட்டத்தில் தொழிலாளர்கள் வாழும் இதே பகுதிக்கு அரச ஊழியர்களுக்கு வீடுகளை அமைத்தால் அதனை நாம் வரவேற்கிறோம். அது ஏனைய துறையினரோடு நமது தொழிலாளர் மக்களும் இரண்டரக் கலக்கும் செல்நெறியை உருவாக்கும். ஆனால், இவர்களது நிலத்தைப் பறித்து வெளியாருக்கு வழங்குவதை நாம் அனுமதிக்க முடியாது. எமது மக்களது தேவைக்கு மேலதிகமான காணியினைக் கொண்டு ஏனைய வீட்டுத்திட்டங்களை யாரும் அமைக்கலாம். நாட்டில் ஏனைய மக்களுக்கு உள்ள அதே காணியுரிமையை நாம் அரசியல் நிபந்தனை அடிப்படையில் வென்றெடுத்துள்ளோம்.அதனை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் ஊவா மாகாண சபை உறுப்பினர் பிரகதி அனுசல்ய, தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் எஸ்.இராஜமாணிக்கம், அப்புத்தளை பிரதேச இணைப்பாளர் திவிமுருகன், நீட்வுட் தோட்ட உரிமையாளர் வீரக்கொடி பிளாண்டேசன் நிறுவனத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -