மாகாண சபை நிதியொதிக்கீட்டில் 7 மில்லியன் ரூபா செலவில் சின்னத்தோணா நிர்மானப்பணி ஆரம்பம்..!

ஹைதர் அலி-
ட்டக்களப்பு மாவட்டத்தின், புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைத்திருக்கின்ற சின்னத்தோணா பல வருட காலமாக மிகவும் மோசமான நிலையில் பாதிப்படைந்து ஒழுங்கற்று இருப்பதனால் மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிந்தோட முடியாமல் நீர் தேங்கி நின்று சூழலையும் அப்பிரதேசத்தினையும் பாதிப்பதோடு, டெங்கு போன்ற பாரிய நோய்களை உண்டாக்கக்கூடிய நுளம்புகள் பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும், தோணாவையன்டி பல மலசலகூடங்கள் அமையப்பெற்று இருப்பதனால் மழைக்காலங்களில் அதன் நீர் அனைத்து இடங்களிலும் பரவி நிலத்தடி நீரினை பாதிப்படையச் செய்வது போன்ற பரச்சினைகளை முன்வைத்து தோணாவை சீர்செய்து தருமாறு அப்பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தனர்.

பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கமைவாக 18.02.2016ஆந்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் கலவிஜயமொன்றின மேற்கொண்டு அதன் நிலைமைகளை பார்வை இட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் திரு. S. இன்பராஜா, நகரசபை செயலாளர் J. சர்வேஸ்வரன், மற்றும் உயரதிகாரிகள் பலரை உரிய இடத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள நிலைமைகளை காண்பித்ததுடன் அப்பிரதேச மக்களின் அவல நிலைகளையும் சுட்டிகாட்டி வடிகானை விரைவாக சீர் செய்ய பணிப்புரைவிடுத்ததுடன் அதனை வடிவமைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மீன்பிடி இலாகா வீதியில் அமைத்திருக்கின்ற சின்னத்தோணாவினை சீர்செய்வதற்காக ஆரம்ப கட்டமாக 7 மில்லியன் ரூபா மாகாண சபை NELSIP பிரிவினூடாக நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அதனது கட்டுமான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றது. 

இக் கட்டுமான வேலைகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் 20.07.2016ஆந்திகதி நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் நீரோட்டத்தின் அடிப்படையில் நீர் வடிந்தோடக்கூடிய வகையில் சிறந்த முறையில் அமைக்கப்பட வேண்டுமென்று காத்தான்குடி நகர சபை தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கும், கட்டுமான பணியில் ஈடுபடுகின்ற கொந்திராத்து நிறுவனத்தினருக்கும், பணியாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியதுடன் அதற்கான பணிபுரையினையும் விடுத்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -