கல்முனை புதிய மாநகர அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு...!

ஷபீக் ஹுசைன் -
ல்முனை புதிய மாநகர அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதியமைச்சர்களான எச்.எ்ம்.எம் ஹரீ்ஸ், பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் மன்சுர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை தலைவர்கள், அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று (15) கல்முனை மாநகரசபையில் நடைபெற்றது.

புதிய கல்முனை மாநகர அபிவிருத்திக்காக 600 மில்லியன் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கல்முனை இறைவெளிக் கண்டத்தில் உள்ள 13 ஏக்கர் காணியும், சாய்ந்தமருது கரைவாகு கண்டத்தில் உள்ள 23 ஏக்கர் காணியும் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கான அங்கீகாரத்தை காணி மீட்பு கூட்டுத்தாபனமும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய வீதி அபிவிருத்தி திட்டங்கள், நூலக அபிவிருத்தி, சாய்ந்தமருது தோனா அபிவிருத்தி, அரச கட்டிடங்களை மீள் நிர்மாணம் செய்வதில் உள்ள சிக்கல்கள் போற்றவற்றை மீளாய்வு செய்து அவற்றை தீர்த்து வைப்பதற்கான முடிவுகளும் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, காணி மீட்டல் கூட்டுத்தாபனம் உட்பட அரச நிறுவங்களின் உயரதிகாரிகளுடன் நடைபெற இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் கரையோர மாவட்டங்களில் காணப்படும் குப்பை அகற்றும் பிரச்சினை தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது. 


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -